என்னை மிஞ்சிய விஞ்ஞானி அமைச்சர் செந்தில் பாலாஜி.. செல்லூர் ராஜூ விமர்சனம்

0 7757
தமிழகத்தில் மின் தடைக்கு காரணம் அணில் தான் என்று கண்டுபிடித்துள்ள மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் மின் தடைக்கு காரணம் அணில் தான் என்று கண்டுபிடித்துள்ள மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

மதுரை கோரிப்பாளையத்தில் அதிமுக மாணவரணி உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கடந்த பத்தாண்டுகளாக அதிமுக ஆட்சியில் வெளிநாடுகளுக்குச் சென்ற அணில்கள், தற்போது தமிழகத்துக்கு படையெடுத்து வந்து மின் கம்பி மீது ஓடி வருவதை கண்டுபிடித்த அமைச்சருக்கு தான் நோபல் பரிசு வழங்க வேண்டும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments