வட தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

0 9133
வட தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

வெப்பச் சலனத்தின் காரணமாக வட தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் கன மழையும், பிற வட மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். நாளை சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், திருவள்ளூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் கன மழையும், பிற வட மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

ஜூன் 28, 29, 30 ஆகிய நாட்களில் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

சென்னையில் அடுத்த இரு நாட்கள் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments