குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் காவலர்களை தாக்கும் வீடியோ காட்சிகள்

0 4565
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே, குடிபோதையில் இருந்த இளைஞர்கள் சோதனைச்சாவடியில் போலீசாரை தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே, குடிபோதையில் இருந்த இளைஞர்கள் சோதனைச்சாவடியில் போலீசாரை தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

கடந்த 23-ஆம் தேதி, விருவீடு காவல் சோதனைச்சாவடியில், சாலையில் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டு மீது மோதி, குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் இருந்து 2 இளைஞர்கள் கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. பணியில் இருந்த காவலர்கள் அவர்களை மீட்டு முதலுதவி செய்ததாகவும், ஆனால் அந்த இளைஞர்களும் பின்னால் வந்த அவர்களுடைய உறவினர்களும் காவல்துறையினர் மறித்ததாலயே இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் கீழே விழுந்ததாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு அருகில் இருந்த தென்னை மட்டையை எடுத்து காவலரை தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நல்லுத்தேவன்பட்டியை சேர்ந்த ரஞ்சித், கனிராஜ் உள்ளிட்ட 3 பேரை கைது செய்த போலீசார், மேலும் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments