அயோத்தியாவில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து யோகி ஆதித்யநாத்துடன் பிரதமர் மோடி காணொளியில் ஆலோசனை

0 1967

பிரதமர் மோடி, உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் காணொளியில் பேசி, அயோத்தியாவில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.

மத்திய அரசின் ஒப்புதலுடன் அயோத்தியாவில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படுவதாக யோகி ஆதித்யநாத் கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தார். இதற்காக மாவட்ட நிர்வாகத்திற்கு உ.பி. அரசு 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.

மத்திய அரசு 250 கோடி ரூபாயை வழங்கும் எனவும் ஆதித்யநாத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அயோத்தியாவின் உள்கட்டமைப்புகளை நவீனப்படுத்துதல், சாலைகளை மேம்படுத்துதல், ரயில்வே நிலைய மேம்பாடு, புதிய விமான நிலையம் உள்ளிட்ட பணிகள் எந்த அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளன என மோடி யோகி ஆதித்யநாத்திடம் கேட்டறிந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments