ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பு மருந்துகளை வழங்க பணக்கார நாடுகளுக்கு WHO வேண்டுகோள்

0 2287
ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பு மருந்துகளை வழங்க வேண்டும் எனப் பணக்கார நாடுகளுக்கு உலக நலவாழ்வு அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதனாம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பு மருந்துகளை வழங்க வேண்டும் எனப் பணக்கார நாடுகளுக்கு உலக நலவாழ்வு அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதனாம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பணக்கார நாடுகள் கொரோனா தொற்று அபாயம் இல்லாத பிரிவினருக்கும் தடுப்பூசி போடத் தொடங்கியுள்ள அதேநேரத்தில், ஏழை நாடுகள் தடுப்பு மருந்து இல்லாமல் தவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆப்பிரிக்க நாடுகளில் முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது கடந்த வாரத்தில் கொரோனா பாதிப்பு 40 விழுக்காடு அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏழை நாடுகளுக்குத் தடுப்பு மருந்துகளைப் பகிர்ந்தளிக்கப் பணக்கார நாடுகள் தயங்குவதாகவும், இதில் உலக நாடுகளும், உலகச் சமுதாயமும் தோல்வி அடைந்து விட்டதாகவும் குறிப்பிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments