விதிகளை மீறியதற்காக அபராதம் வசூலித்த போலீசாருக்கு கொலை மிரட்டல் ; இந்து முன்னணி பிரமுகர் மீது வழக்கு பதிவு

0 2008
விதிகளை மீறியதற்காக அபராதம் வசூலித்த போலீசாருக்கு கொலை மிரட்டல்

சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா பகுதியில், மாஸ்க் அணியாமல், இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த, இந்து முன்னணி பிரமுகர் செல்லபாண்டியனை மடக்கி போலீசார் அபராதம் விதித்ததோடு, இரு சக்கர வாகனத்தை ஓரங்கட்டியுள்ளனர்.

இதனால் கோபமடைந்த அந்த நபர், போக்குவரத்து காவல் ஆய்வாளர் மற்றும் போலீசாரை பார்த்தது ஆபாசமாக திட்டித் தீர்த்தார். எங்க ஏரியாவிற்குள் நான் வரக்கூடாதா? பார்த்து கொள்ளலாமா? எனக்கே அபராதமா? என எகிறிய அந்த நபர், அபராதம் வசூலித்த தலைமை காவலரிடம் சென்று, தீ வைத்துக் கொளுத்தி விடுவேன் என்று மிரட்டினார்.

ரகளையில் ஈடுபட்ட இந்து முன்னணி பிரமுகர் மீது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 5 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments