புது சர்ச்சையை ஏற்படுத்திய சி.எஸ்.கே அணி கேப்டன் தோனியின் புகைப்படம்

0 8079

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்ட தோனியின் புகைப்படத்திற்கு எதிராக புதுசர்ச்சை ஏற்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, சிம்லாவுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு ‘மரக்கன்றுகளை நட்டு, காடுகளை காப்பாற்றுங்கள்’ என மரத்தில் எழுதப்பட்டிருந்த வாசகத்துக்கு அருகே தோனி எடுத்த புகைப்படம் சிஎஸ்கே அணியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டது. இதனை கண்ட நெட்டிசன்கள் மரத்தை வெட்டி அதன்மூலம் மரம் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு செய்வதா? என விமர்சித்து வருகின்றனர்.

மர ஆலைகளில் கழிவாக வீசப்பட்ட மரத்திலேயே இந்த வாசகம் எழுதப்பட்டிருப்பதாக தோனி தங்கியிருந்த ரெஸ்டாரண்ட் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments