சென்னை-பாரிஸ் இடையே முதன் முறையாக நேரடி விமான சேவை..!

0 3632

பிரான்ஸ் தலைநகரான பாரிசிஸ் - சென்னை இடையே முதன்முறையாக நேரடி விமான சேவையை ஏர் பிரான்ஸ் நிறுவனம் துவக்கி உள்ளது.

இதுவரை சென்னையில் இருந்து பாரிசுக்கு செல்பவர்கள் டெல்லி, மும்பை அல்லது பெங்களூர் வழியாகவோ அல்லது துபாய் வழியாகவோ செல்லும் நிலை இருந்து வந்தது.

இந்த நிலையில் இன்று காலை 10.25 மணிக்கு பாரிசில் இருந்து புறப்பட்ட ஏர் பிரான்ஸ் விமானம் நேரடியாக இரவு 11.45 மணிக்கு சென்னை வந்தடையும். 28 ஆம் தேதி காலை 1.20 மணிக்கு விமானம் சென்னையில் இருந்து பாரிசுக்கு புறப்படும்.

தற்போது கொரோனா ஊரடங்கு தடை காரணமாக வியாழக்கிழமை பாரிசில் இருந்தும், சனிக்கிழமை சென்னையில் இருந்தும் சேவை நடைபெறும். பிறகு திங்கள், புதன், வெள்ளி என வாரத்திற்கு 3 நாட்கள் சென்னையில் இருந்து விமானம் புறப்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments