டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை அக்டோபர் 17ந் தேதி தொடங்கத் திட்டம்

0 2815

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அக்டோபர் 17ந் தேதி முதல் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை அக்டோபர்- நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இந்தியாவில் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால் இந்த போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்படுகிறது.

அக்டோபர் 17-ம் தேதி முதல் நவம்பர் 14-ம் தேதி வரை 20 ஓவர் உலக கோப்பை போட்டியை அங்குள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடத்த ஐ.சி.சி. முடிவு செய்திருப்பதாகவும், இதில் தொடக்க கட்ட சில ஆட்டங்கள் ஓமனில் நடைபெறும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments