காங்கிரஸ் கட்சி இணைந்தால் தான் பாஜகவுக்கு எதிரான வலுவான எதிர்க்கட்சிக் கூட்டணி அமையும் :சரத்பவார் கருத்து

0 5198
காங்கிரஸ் கட்சி இணைந்தால் தான் பாஜகவுக்கு எதிரான வலுவான எதிர்க்கட்சிக் கூட்டணி அமையும் :சரத்பவார் கருத்து

காங்கிரஸ் கட்சி இணைந்தால் மட்டுமே, பாஜகவுக்கு எதிரான வலுவான எதிர்க்கட்சிக் கூட்டணியை அமைக்க முடியும், என, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

2024ல் நடக்கவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை சரத் பவார் தொடங்கி உள்ளார். சமீபத்தில் அவரது தலைமையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

அதில் திரிணமுல் காங்., ஆம் ஆத்மி, ராஷ்ட்ரீய லோக் தளம், தேசிய மாநாடு கட்சி உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். எனினும், காங்கிரஸ் கட்சி சார்பில் யாரும் அந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சரத் பவார், காங்கிரசைத் தவிர்த்து வலுவான கூட்டணியை அமைக்க முடியாது என்றார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments