காதல் மனைவிக்கு மருத்துவமனையில் வளைகாப்பு செய்து அழகு பார்த்த கணவன்..!

0 3451

நெல்லை அரசு மருத்துவமனையில், பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டுள்ள காதல் மனைவிக்கு கணவன் வளைகாப்பு செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தென்காசியை சேர்ந்த கருப்பசாமி என்பவர், தன்னுடன் ஜவுளிக்கடையில் பணியாற்றிய பெற்றோரை இழந்த சாரா என்ற பெண்ணை காதலித்து கடந்த ஒரு வருடத்திற்கு முன் திருமணம் செய்து கொண்டார். தற்போது 9 மாத கர்ப்பிணியான சாரா, கடந்த வாரம் பிரசவத்திற்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.

ஊரடங்கால், நடத்த முடியாமல் போன, வளைகாப்பை நடத்த ஆசைப்பட்ட கருப்பசாமி, தனது விருப்பத்தை செவிலியர்களிடம் தெரிவித்திருக்கிறார். இதற்கு மருத்துவரிடம் அனுமதி பெற்று, மருத்துவர்கள், செவிலியர்கள், சக கர்ப்பிணிகள் முன்னிலையில், மனைவி சாராவுக்கு வளைகாப்பு நடத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments