தாலிபன் கட்டுப்பாட்டில் இருந்த 6 மாவட்டங்களை மீட்டது ஆப்கான் படை..!

0 2670

ப்கானிஸ்தான் படைகளிடம் தாலிபன் தனது கட்டுப்பாட்டில் இருந்த 6 மாவட்டங்களைப் பறிகொடுத்துள்ளது.

தாலிபனுடன் போரிட்டு ஆப்கான் படையினர் இந்த ஆறு மாவட்டங்களை மீட்டனர். தொடர்ந்து அந்நாட்டில் தாலிபனுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே உள்நாட்டு யுத்தம் மூண்டு கடும் வன்முறைகள் நிகழ்ந்துவருகின்றன.

அமெரிக்கா தனது படைகளைத் திரும்பப் பெற்றுள்ள சூழலில் இந்த யுத்தம் கடுமையாகியுள்ளது. இதனிடையே ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி அமெரிக்கா சென்றுள்ளார். அவர் வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

ஆப்கானில் தாலிபன் படைகள் பல மாவட்டங்களைக் கைப்பற்றி வரும் நிலையில் தாலிபன்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட விரும்புகிறார்களா அல்லது போர் நடவடிக்கையால் ஆப்கானை முழுவதுமாகக் கைப்பற்ற முயற்சிக்கிறார்களா என்று அமெரிக்கா உன்னிப்பாக சூழ்நிலையை கவனித்து வருவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments