”கொரோனா இரண்டாவது அலை போல மூன்றாவது அலை தீவிரமாக இருக்காது” -புதிய ஆய்வில் தகவல்

0 3790

கொரோனா இரண்டாவது அலையைப் போல் மூன்றாவது அலை அத்தனை தீவிரமாக இருக்காது என்று புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருக்கும் போதே மூன்றே மாதங்களில் இந்தியாவின் 40 சதவீத மக்கள் தொகையினர் தடுப்பூசிப் போட்டுக் கொண்டுள்ளனர்.

இதன் அடிப்படையில் மூன்றாவது அலை அத்தனை தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தாது என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சில், தொற்று நோய்த்துறை நிபுணர்கள், லண்டன் இம்பிரியல் கல்லூரியின் பொது சுகாதாரத்துறை பயிலகத்தின் நிபுணர்கள் உள்ளிட்டோர் மேற்கொண்ட இந்த ஆய்வின் விவரங்கள் இந்திய மருத்துவ ஆய்வு இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments