"கர்ப்பிணிப் பெண்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்" -சுகாதார அமைச்சகம் அறிவிப்பு

0 2645

ர்ப்பிணிப் பெண்களும் தடுப்பூசிப் போட்டுக் கொள்ளலாம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

இது குறித்து நடைபெற்ற கலந்துரையாடலில் பேசிய தேசிய நோய்க்கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குனர் டாக்டர் எஸ்.கே.சிங், இதுவரை 48 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறினார்.

கர்ப்பிணிப் பெண்களும் தடுப்பூசிப் போட்டுக் கொள்ளலாம் என்றும் அவர் அப்போது குறிப்பிட்டார். இதனிடையே சுகாதார அமைச்சகம் சார்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஐ.சி.எம்.ஆர் இயக்குனர் டாக்டர் பலராம் பார்கவாவும் கர்ப்பிணிப் பெண்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டிருப்பதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments