டாக்டரிடமே கட்டிங் டூபாக்கூர் செய்தியாளர்... எஸ்.பி.யிடம் பகிரங்க மன்னிப்பு..!

0 3372

பல்லடத்தில் மருத்துவமனை நடத்தும் டாக்டர் ஒருவர் மாமூல் பணம் கொடுக்க மறுத்ததால், அவரை பற்றி வாட்ஸ் அப்பில் அவதூறு தகவல் பரப்பிய போலி இணையதள செய்தியாளர் போலீசாரிடம் சிக்கி, எஸ்.பி. முன்பு பகிரங்க மன்னிப்பு கேட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது

தனக்கு தானே வீடியோ விளம்பரம் வெளியிட்டுக் கொள்ளும் இவர் தான் பகிரங்க மன்னிப்புக்கேட்டு வீடியோ வெளியிட்ட போலி செய்தியாளர் சரவணக்குமார்..!

பல்லடம் அண்ணாநகரில் பிரைம் மெடிக்கல் சென்டர் என்ற பெயரில் மருத்துவமனையை நடத்தி வரும் டாக்டர் சேவியர் பிரசாத் . இவரது மருத்துவமனைக்கு பெரியார் நகரைச் சேர்ந்த சரவணகுமார் என்பவர் சென்று, அங்கிருந்த மருத்துவரின் சகோதரரிடம், தன்னை ஒரு இணையதள செய்தியாளர் என்று கூறிக் கொண்டு, டாக்டர் குடும்பத்தில் பிரச்சனையாமே ? அதை செய்தியாக வெளியிடாமல் இருக்க பத்தாயிரம் ரூபாய் தரவேண்டும் என பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

அதற்கு மருத்துவரின் சகோதரர் மறுப்பு தெரிவித்ததால் அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சரவணகுமார் உள்பட 3 பேரும் அங்கிருந்து கிளம்பியதாக கூறப்படுகிறது. மறுநாள் காலை, மருத்துவரின் குடும்பத்தை குறித்தும் மருத்துவமனையை குறித்தும் எந்தவித ஆதாரமும் இல்லாத அவதூறு செய்திகளை பல்வேறு வாட்ஸ் அப் குழுக்களில் சரவணன் பரப்பியதாக கூறப்படுகிறது.

இதை அடுத்து மருத்துவர் பிரசாத் சேவியர் தனது குடும்பத்தினருடன் சென்று பல்லடம் காவல் நிலையத்தில் ஆதாரத்துடன் புகார் அளித்தார். பல்லடம் காவல் ஆய்வாளர் தங்கபாண்டியன் புகாரினை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் விசாரிப்பதாக தாமதப்படுத்தி உள்ளார். இதனைத் தொடர்ந்து பல்லடம் டிஎஸ்பி வெற்றிச்செல்வனிடம் டாக்டர் பிரசாத் சேவியர் புகார் செய்தார்.

இதையடுத்து இந்த புகார் விவகாரம் திருப்பூர் எஸ்.பி சசாங்சாய் பார்வைக்கு சென்றது. அவர் சரவணனை அழைத்து விசாரித்த போது வாட்ஸ் ஆப்பில் தான் பரப்பிய அவதூறு செய்திக்கு தானே பகிரங்கமாக மறுப்பும் மன்னிப்பும் கேட்டு வீடியோ வெளியிட்டு அதே வாட்ஸ் அப்பில் பரப்பி விடுகிறேன் விட்டு விடுங்கள் என்று கெஞ்சியுள்ளார். அதன் படி தான் செய்த தவறை ஒப்புக் கொண்டு பகிரங்க மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டார் போலி செய்தியாளர் சரவணன்

தமிழக அரசின் அங்கீகார அட்டை இல்லாத போலி செய்தியாளர்கள் முக்கிய பிரமுகர்களை மிரட்டி பணம் பறிப்பதை வாடிக்கையாக செய்து வருகின்றனர். அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் ஆதாரத்துடன் புகார் அளிக்கும் படசத்தில் இப்படிப்பட்ட நபர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments