நடிகையை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதாக வழக்கு - மணிகண்டனுக்கு ஜாமீன் மறுப்பு

0 3363

திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி, கருக்கலைப்பு செய்ய வைத்ததாக துணை நடிகை அளித்த புகாரில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

புகார் அளித்த பெண்ணை மணிகண்டன் மிரட்டியதோடு, அந்தரங்க புகைப்படங்களை வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பியதை வலைதளங்களில் பதிவிட்டதாக கருத வேண்டும் எனக் கூறிய போலீசார், மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியுள்ளது என வாதிட்டனர்.

நடிகை தரப்பிலும், மணிகண்டனுக்கு ஜாமீன் வழங்க கடுமையாக ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. 3 தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி செல்வக்குமார், விசாரணை இன்னும் முடிவடையாததால், ஜாமீன் வழங்க முடியாது எனக் கூறி மணிகண்டன் மனுவை தள்ளுபடி செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments