120 ஆவது மாடியில் உணவகம், 24 மணி நேரமும் பட்லர் சேவை ; மேகக் கூட்டங்களிடையே சொகுசு விருந்தோம்பல் தரும் ஹோட்டல்

0 26278
மேகக் கூட்டங்களிடையே சொகுசு விருந்தோம்பல் தரும் ஹோட்டல்

120ஆவது மாடியில் உணவகம், 24 மணி நேரமும் பட்லர் சேவை என மேகக் கூட்டங்களிடையே சொகுசு விருந்தோம்பல் தரும் ஹோட்டல், சீனாவின் ஷாங்காய் நகரில் திறக்கப்பட்டுள்ளது.

உலகின் இரண்டாவது உயரமான கட்டிடமான ஷாங்காய் டவரின் மேல்தளங்களில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஜே ஹோட்டலில் 160 அறைகள், 7 உணவகங்கள், 84ஆவது மாடியில் நீச்சல் குளம், ஸ்பா, பார்கள் என உயர்தர நட்சத்திர ஹோட்டலுக்குரிய அனைத்து அம்சங்களும் உள்ளது. உயரம் அதிகம் என்றாலும், கண்ணிமைக்கும் நேரத்தில் மேல்தளம் செல்ல நொடிக்கு 18 மீட்டர்கள் என்ற வேகத்தில் செல்லும் லிஃப்ட்டுகளை வைத்துள்ளனர்.

முதல் நாளில் திறப்பு விழா சலுகை கட்டணம் அறிவிக்கப்பட்டாலும், ஒரு நாள் இரவு தங்க சுமார் 10 ஆயிரம் டாலர்கள் வரை வசூலிக்கப்படுகிறது. இருப்பினும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும ஆர்வம் காணப்படுவதாக ஜே ஹோட்டல் நிர்வாகம் கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments