சென்னை புறநகர் ரயில்களில் அனைத்துப் பயணிகளுக்கும் அனுமதி - நூற்றுக்கணக்கான பயணிகளால் நிரம்பும் ரயில் நிலையம்

0 2319
சென்னை புறநகர் ரயில்களில் அனைத்துப் பயணிகளுக்கும் அனுமதி - நூற்றுக்கணக்கான பயணிகளால் நிரம்பும் ரயில் நிலையம்

சென்னை புறநகர் மின்சார ரயில்களில் இன்று முதல் அனைத்து வகையான பயணிகளும் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், செண்ட்ரல் ரயில் நிலையத்தில் திரளான மக்கள் கூட்டத்தைக் காண முடிந்தது.

முன்களப்பணியாளர்களும் உரிய அனுமதி பெற்றவர்களும் மட்டுமே மின்சார ரயில்களில் பயணிக்க அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

தற்போது ஆண்களுக்கு மட்டும் நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், பெண்கள், குழந்தைகள், மத்திய, மாநில அரசுப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் உள்ளிட்டோர் எப்போது வேண்டுமானாலும்  பயணிக்கலாம்.

கொரோனா தடுப்பு விதிகளை அனைவரும் கட்டாயம் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments