இன்று நடைபெறுகிறது காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம்

0 2083

காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரியிலிருந்து தமிழகத்திற்கு உரிய நீர் திறக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்த நிலையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.

காணொலி காட்சி மூலம் நடைபெற இருக்கும் இக்கூட்டத்தில் தமிழகம், புதுச்சேரி, கேரளா மற்றும் கர்நாடகம் ஆகிய 4 மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

மேகதாது அணைக்கு எதிர்ப்பு, காவிரியில் நீர் திறப்பு ஆகியவை தமிழக அரசின் சார்பில் வலியுறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments