அமெரிக்காவில் குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 99 பேர் கதி என்ன?

0 2471

மியாமி கடற்கரை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததை தொடர்ந்து மாயமான 100 பேரை தேடும் பணி இரவு பகலாக நடக்கிறது.

Biscayne Bay தீவான Surfside-ல் இருந்த சாம்பியன் டவர்ஸ் சவுத் என்ற இந்த 40 ஆண்டு பழைமையான 12 மாடி கட்டிடம் திடிரென இடிந்து விழுந்து தரைமட்டமானது.

சம்பவ இடத்தில் கட்டிட இடிபாடுகள் மலை போல குவிந்துள்ள நிலையில், உள்ளே சிக்கியவர்களின் அபய குரல் கேட்கிறதா என மீட்பு குழுவினர் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

விபத்து நடந்து 18 மணி நேரம் ஆன பின்னரும் இன்னும் 99 பேரை காணவில்லை என மியாமி கவுன்டி மேயர் Daniella Levine Cava தெரிவித்தார். இடிந்த கட்டிடத்தில் இருந்து 35 பேர் முன்னதாக மீட்கப்பட்ட நிலையில், ஒருவர் மட்டுமே உயிரிழந்ததாக இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டிடத்தில் சில சீரமைப்பு பணிகள் நடந்த போது அது இடிந்து விழுந்தாலும், விபத்துக்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments