வெளிநாடு செல்பவர்கள் தடையற்ற பயணத்தை மேற்கொள்ள புதிய வசதி அறிமுகம்

0 3900
வெளிநாடு செல்பவர்கள் தடையற்ற பயணத்தை மேற்கொள்ள புதிய வசதி அறிமுகம்

வெளிநாடு செல்பவர்கள் தடையற்ற பயணத்தை மேற்கொள்ளும் வகையில், கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழில் அவர்களின் பாஸ்போர்ட் எண்ணை இணைப்பதற்கான வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆரோக்ய சேது செயலி யின் சுட்டுரைப் பதிவில், கொரோனா தடுப்பூசி சான்றிதழில் கடவுச்சீட்டு எண்ணை இணைக்க விரும்புபவர்கள் வலைதளத்தில் இடம்பெற்றிருக்கும் பாஸ்போர்ட் பிரிவை தேர்வு செய்து, அதில் அந்த எண்ணை பதிவு செய்யவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் மூலம் பாஸ்போர்ட் எண்ணுடன் கூடிய புதிய தடுப்பூசி சான்றிதழை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாஸ்போர்ட்டில் உள்ளது போன்று தடுப்பூசி சான்றிதழிலும் பெயரை திருத்திக் கொள்வதற்கான வாய்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு பாஸ்போர்ட் எண்ணை பதிவு செய்யவும் பெயர் மாற்றம் செய்யவும் ஒருமுறை மட்டுமே வாய்ப்பளிக்கப்படும் என்றும் எனவே, விவரங்களை தவறின்றி கவனமுடன் பதிவிடவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments