என்னது ஓட்ட காலனாவுக்கு ஒரு கோடி ரூபாயா..? காயின் பஜார் மோசடி..! எல்லாம் பொய் ஏமாறாதீர்கள்..!

0 23814
என்னது ஓட்ட காலனாவுக்கு ஒரு கோடி ரூபாயா..? காயின் பஜார் மோசடி..! எல்லாம் பொய் ஏமாறாதீர்கள்..!

பழைய 2 ரூபாய் நாணயம் மற்றும் வைஷ்ணவதேவி படமிருக்கும் நாணயங்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை பணம் கிடைக்கும் என்று காயின் பஜார் இணையதளம் ஏமாற்றி வருவதாக நாணயவியல் சங்கதலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழ் திரைப்படம் ஒன்றில் ஓட்ட காலனாவை வைத்துக்கொண்டு பல கோடிகள் கிடைக்கும் என்று கற்பனையில் மிதக்கும் காமெடி நடிகர் செந்தில் நடித்த கதாபாத்திரம் போல, நம்மில் பலரை பழைய நாணயங்களுக்கு லட்சங்கள் கிடைக்கும் என்று ஆசை காட்டி வருகின்றது காயின் பஜார் டாட் கம் என்ற இணையதளம்..!

1997ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பழைய இரண்டு ரூபாய் நாணயத்துக்கும், 756 என்ற எண் கொண்ட 5 ரூபாய் நோட்டுக்கும், 10 லட்சம் ரூபாய் வரை பணம் கொட்டிக் கொடுப்பதாகவும், வைஷ்ணவதேவி படத்துடன் கூடிய 5 ரூபாய் நாணயத்துக்கும் லட்சங்களை கொட்டிக் கொடுக்க புரோக்கர்கள் தயாராக இருப்பதாகவும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு நூதன மோசடியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேற்கண்ட பழமையான நாணயங்களை படம் எடுத்து அவர்களது இணையத்தில் பதிவேற்றினால் லட்சங்கள் வீடுதேடி வரும் என்று சொல்லப்பட்டது. உண்மையில் அவர்களது இணையத்தில் நாணயங்களின் படங்களை பதிவேற்றம் செய்வதற்கு என்று தனியாக குறிப்பிட்ட தொகையை பதிவு கட்டணமாக வசூலிக்கப்படுவதாக கூறப்படுகின்றது. இதனை பயன்படுத்தி காயின் பஜார் இணையதள உரிமையாளர்கள் லட்சாதிபதிகளாகிவிட்டனர். ஆனால் அந்த நாணயங்களை கையில் வைத்துக் கொண்டு லட்சம் கிடைக்குமா? கோடி கிடைக்குமா? என்று அழைத்த நம்மவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தமிழக நாணயவியல் சங்க தலைவர் மணிகண்டன் கூறும் அறிவுரை ஒன்று தான்.. காயின் பஜார் டாட்காம்மில் தெரிவித்த தகவல் உண்மையில்லை, ஒரே ஆண்டில் ரிசர்வ் வங்கியால் கோடி கணக்கில் நாணயங்கள் அச்சிடப்படுகின்றது என்கிறார். அத்தனைக்கும் 10 லட்சம் ரூபாய் கொடுக்க முடியுமா? என்பதோடு, சற்று சிந்தித்து பாருங்கள் எல்லாம் மோசடி வேலை, இவற்றை தேடுவதில் உங்கள் நேரத்தையும் காலத்தையும் வீணாக்க வேண்டாம் என்று நாணயவியல் சங்க தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதே நேரத்தில் காயின் பஜார் போன்ற மோசடி இணையதளங்களை நம்பினால், ஓட்ட காலனாவுக்கு ஒரு கோடி ரூபாயின்னு சொன்னாலும் சொல்லுவான்..! மக்களே உஷார்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments