மூலப்பொருள்கள் விலை உயர்வால் சைக்கிள் விலை ரூ.1500 வரை உயர்வு

0 8942

மூலப்பொருள்கள் விலை உயர்வு, சரக்கு போக்குவரத்து செலவு அதிகரிப்பால் சைக்கிள் விலை சுமார் 1500 ரூபாய் வரை உயர்ந்துள்ள நிலையில், தேவை அதிகரித்து சைக்கிள் விற்பனையும் அதிகரித்துள்ளது.

2ஆண்டுகளுக்கு முன்பு 10 ஆயிரம் ரூபாய் முதல் விற்பனையான கியர் சைக்கிள்கள் தற்போது 15,000 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. மூன்று சக்கரங்களை கொண்ட மழலையர் சைக்கிள் 850 ரூபாய் முதல் விற்பனையாகும் நிலையில் சிறுவர்களுக்கான சைக்கிள்கள் 8,000 ரூபாய் வரை விற்பனையாகிறது.

5ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட பெண்களுக்கான சைக்கிள்கள் 6,000 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது. பொதுப்போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது, ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு, பெட்ரோல் விலை உயர்வு போன்ற காரணங்களால் சைக்கிள் விற்பனை அதிகரித்திருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments