சாலை விபத்தில் சிக்கி மூர்ச்சையாகி உயிருக்குப் போராடிய இளைஞர்... முதலுதவி கொடுத்து சுவாசத்தை மீட்ட காவலர் ... குவியும் பாராட்டுகள்

0 3747

தெலுங்கானாவில் சாலை விபத்தில் மூர்ச்சையாகிக் கிடந்த இளைஞரை காவலர் ஒருவர் சி.பி.ஆர் எனப்படும் முதலுதவி சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்றிய வீடியோ வைரலாகி வருகிறது.

பொம்மக்கலைச் சேர்ந்த அப்துல்கான் என்பவர், பைக்கில் சாலையை கடக்க முயன்ற போது வேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அப்துல்கான் மயக்கமடைந்து உயிருக்குப் போராடிய நிலையில், அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் கலீல், உடனடியாக சி.பி.ஆர் எனப்படும் மார்பில் அழுத்தம் கொடுத்து சுவாசத்தை மீட்கும் முதலுதவியை செய்தார். சுமார் 5 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் அப்துல் கானுக்கு சுவாசம் திரும்பி, கை, கால்களில் அசைவு ஏற்பட்டது.

இதனையடுத்து, ஆம்புலனஸ் வரவழைக்கப்பட்டு அப்துல்கான் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனை அறிந்த காவல்துறை உயர் அதிகாரிகள் காவலர் கலீலுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments