வெப்பச்சலனத்தால் சேலம், தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

0 2488

வெப்பச்சலனத்தால் சேலம், தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடலோர மாவட்டங்கள், அதையொட்டிய உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த இரு நாட்களில் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும், ஜூன் 27ஆம் நாள் வட மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஜூன் 28ஆம் நாள் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள் மற்றும் வட உள் மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments