விசாரணைக்கு சென்ற போலீசார் மீது சாக்கடையை அள்ளி வீசி, ஆபாசமாக திட்டிய போதை ஆசாமி

0 4394

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே விசாரணைக்கு சென்ற காவலர் மீது போதை ஆசாமி ஒருவன் சாக்கடையை அள்ளி வீசியதோடு ஆபாச வார்த்தைகளால் வசைபாடிய காட்சிகள் வெளியாகியுள்ளன.

கல்லத்திகுளம் பகுதியைச் சேர்ந்த அசோகன் என்பவன், குடித்துவிட்டு குடியிருப்புவாசிகளுடன் தகராறு செய்த தகவல் அறிந்து சின்ன கோவிலாங்குளம் காவல் நிலைய காவலர் பாலகிருஷ்ணன் அங்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது மதுபோதையில் இருந்த அசோகன் காவலரை ஆபாசமாக திட்டி தீர்த்தான். அவனுக்கு போதையை தெளிய வைக்க காவலர் கையை ஓங்கவே, அவன் பதிலுக்கு சாக்கடையை அள்ளி வீசினான்.

அங்கிருந்தவர்கள் எல்லோரும் வேடிக்கை பார்த்த நிலையில், போதை தலைக்கேறிய ஆசாமி, காவலரை அடிக்கப் பாய்ந்ததோடு அவரது தலைக்கவசத்தை தூக்கி எரிந்து அலப்பறை செய்தான். இந்த வீடியோ வைரலான நிலையில், அசோகன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments