நோ தடுப்பூசி?-நோ சேலரி! உஜ்ஜெயினி மாவட்ட ஆட்சியர் அதிரடி

0 2884

100 சதவிகித தடுப்பூசி திட்டத்தை உறுதி செய்யும் நோக்கில் மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜெயினி மாவட்ட ஆட்சியர் நூதனமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி அடுத்த மாதம் 31 ஆம் தேதிக்குள் தடுப்பூசி போடாத அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதம் முதல் சம்பளம் வழங்கப்பட மாட்டாது என அவர் அறிவித்துள்ளார்.

ஜுன் மாத சம்பளம் போடும் போதே, தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ்களை அரசு ஊழியர்களிடன் இருந்து வாங்க வேண்டும் என்றும் ஜூலை 31 க்குள் தடுப்பூசி சான்றிதழை தாக்கல் செய்யாதவர்களுக்கு அந்த மாதம் முதல் சம்பளம் வழங்க கூடாது என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments