மோடி என்னும் பெயர் குறித்துப் பேசியதற்காக அவதூறு வழக்கு... சூரத் நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல்காந்தி

0 2028

மோடி என்னும் பெயர் வைத்திருப்பவர்கள் அனைவரும் திருடர்களாக இருக்கிறார்கள் என்று பேசியதற்காகத் தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில் குஜராத்தின் சூரத் நீதிமன்றத்தில் ராகுல்காந்தி ஆஜராகி விளக்கம் அளித்தார்.

2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது கர்நாடகத்தின் கோலாரில் பேசிய ராகுல்காந்தி, நீரவ் மோடி, லலித் மோடி எனத் திருடர்கள் அனைவரும் ஒரே பெயரைக் கொண்டிருப்பதாகப் பிரதமர் பெயரையும் சேர்த்துக் குறிப்பிட்டார்.

ராகுல் காந்தியின் பேச்சு ஒட்டுமொத்த மோடி சமூகத்தினரின் பெயரைக் கெடுக்கும் வகையில் உள்ளதாகக் கூறிக் குஜராத் சூரத் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இறுதி வாக்குமூலம் அளிக்கும்படி ராகுல்காந்திக்குக் கடந்த வாரம் நீதிபதி உத்தரவிட்டார்.

அதன்படி ஆஜரான ராகுல்காந்தி தனது விளக்கத்தை எடுத்துரைத்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments