பாகிஸ்தானின் குடியிருப்புப் பகுதியில் பயங்கர குண்டுவெடிப்பு - 4 பேர் பலி

0 2088
பாகிஸ்தானின் குடியிருப்புப் பகுதியில் பயங்கர குண்டுவெடிப்பு - 4 பேர் பலி

பாகிஸ்தானின் லாகூரில் குடியிருப்புப் பகுதியில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 4-வயதுக் குழந்தை உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.

குண்டு வெடிப்புத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், நடந்தது தற்கொலைப் படைத்  தாக்குதலா அல்லது ரிமோட் குண்டுவீச்சுத் தாக்குதலா என விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

மேலும் தாக்குதலில் 14-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், பலி எண்ணிக்கை உயரலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறையில் இருக்கும் லஷ்கர்-இ தொய்பா அமைப்பின் தலைவனான ஹபீஸ் சயீத் வீட்டின் அருகில் குண்டு வெடிப்பு நடந்துள்ளதால் திட்டமிட்ட சதியா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments