கொரோனா கட்டுக்குள் இருப்பதால் இடைத்தேர்தலை நடத்தும்படி தேர்தல் ஆணையத்திடம் மம்தா பானர்ஜி கோரிக்கை

0 3071
கொரோனா கட்டுக்குள் இருப்பதால் இடைத்தேர்தலை நடத்தும்படி தேர்தல் ஆணையத்திடம் மம்தா பானர்ஜி கோரிக்கை

கொரோனா கட்டுக்குள் இருப்பதால் இடைத் தேர்தலை நடத்தும் படி மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளர்.

நந்திகிராம் தொகுதியில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் பாஜகவின் வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்த மம்தா பானர்ஜி தமது கட்சி பெரும்பான்மை பலத்துடன் வென்றதையடுத்து மீண்டும் முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.

நவம்பர் மாதம் 5ம் தேதிக்குள் அவர் தேர்தலில் ஜெயிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.தற்போதைய கொரோனா பரவல் சூழல் காரணமாக இடைத்தேர்தல்களை ஒத்தி வைக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்திருப்பது மம்தா பானர்ஜிக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனால் இடைத்தேர்தலை நடத்தும் படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments