கியூபாவின் அப்டாலா கொரோனா தடுப்பூசி 92 விழுக்காடு பாதுகாப்பானதாக இருக்கும் என அறிவிப்பு

0 3013
கியூபாவின் அப்டாலா கொரோனா தடுப்பூசி 92 விழுக்காடு பாதுகாப்பானதாக இருக்கும் என அறிவிப்பு

கியூபா தயாரிப்பு கொரோனா தடுப்பு மருந்தான அப்டாலா 92 விழுக்காடு பாதுகாப்பானதாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்நாடு விடுத்துள்ள அறிக்கையில், சுமார் 10 மாதங்களுக்குப் பின் இந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் மருத்துவத்தில் பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்த முடியும் என தெரிவித்துள்ளது.

பயோ கியூபா பார்மா நிறுவனம் தயாரித்துள்ள அப்டாலா தடுப்பூசி 3 முறை பயன்படுத்தக்கூடியது. கியூபாவில் ஏற்கனவே சோபரனா 2 என்ற மருந்து பயன்பாட்டில் உள்ள நிலையில் தற்போது அப்டாலாவையும் பயன்பாட்டுக்கு கொண்டு திட்டமிடப்பட்டுள்ளது.

கியூபா தயாரிக்கும் தடுப்பூசிகளை வாங்க வெனிசுலா, வியட்நாம், அர்ஜென்டினா, மெக்சிகோ உள்ளிட்ட பல நாடுகள் ஆர்வம் காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments