முகக்கவசம், தலைக்கவசம் அணியாமல் வந்த போதை ஆசாமி... "நான் யார் தெரியுமா ?" எனக்கேட்டு பெண் காவலருக்கு மிரட்டல்

0 9424

சென்னை புழல் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட ஊர்க்காவல்படை பெண் காவலர்களை அவமதிக்கும் வகையிலும் மிரட்டும் வகையிலும் நடந்து கொண்டதாக கூறப்படும் நபரின் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

புழல் பகுதியில் ஊர்காவல் படை பெண் காவலர்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக தலைக்கவசம், முகக்கவசம் இன்றி வந்த போதை ஆசாமி ஒருவனை மடக்கி விசாரித்தனர். உடனே அந்த நபர், நான் யார் தெரியுமா ? என் பின்னணி தெரியுமா என அவர்களை மிரட்டியதாக சொல்லப்படுகிறது..

தகவலறிந்து வந்த போக்குவரத்துப் போலீசாரின் விசாரணையில் அந்த நபர் பாடியநல்லூரைச் சேர்ந்த கார்த்திக் என்பது தெரியவந்தது. மது அருந்தியிருப்பது உறுதியானதால், வாகனத்தைப் பறிமுதல் செய்து அந்த நபரை அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments