மாணவியை மிரட்டிய பிளாக்மெயில் தருதல, உருப்படாத தாயுடன் கைது..! பலரை அடித்து உதைத்த வீடியோ சிக்கியது

0 5150
மாணவியை மிரட்டிய பிளாக்மெயில் தருதல உருப்படாத தாயுடன் கைது..! பலரை அடித்து உதைத்த வீடியோ சிக்கியது

கோயம்புத்தூரில் செல்பி புகைப்படத்தை ஆபாச படமாக சித்தரித்து இணையத்தில் வெளியிடுவேன் என்று கல்லூரி மாணவியை மிரட்டி தற்கொலைக்கு தூண்டிய பிளாக்மெயிலர், தாயுடன் கைது செய்யப்பட்டுள்ளான். பணத்திற்காக பல்வேறு மாணவர்களை கடத்தி தாக்கிய வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தலையில் பாதி வெட்டப்பட்ட முடியுடன் சலூன்கடையில் இருந்து எழுந்து வந்தவன் போல காணப்படும் இவன் தான் பிளாக்மெயில் கும்பலின் லீடர் கேசவக்குமார் என்கிற விஜய்சேதுபதி..!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த விஜய் சேதுபதி, கோயம்புத்தூரில் உள்ள கல்லூரி ஒன்றில் 3 ஆண்டு படித்து வந்த போது கஞ்சாவுக்கு அடிமையாகி, பல்வேறு அடிதடி சம்பவங்களில் ஈடுபட்டதால் கல்லூரியில் இருந்து விரட்டப்பட்டான். அதன் பிறகும் கல்லூரி மாணவன் போல பேருந்தில் தொங்கிக் கொண்டு சென்ற இந்த விஷ சேதுபதியின் குணம் தெரியாமல், கல்லூரி மாணவி ஒருவர் நட்பாக பழகி உள்ளார். அவருடன் எடுத்த செல்பி புகைப்படத்தை ஆபாசமாக மாற்றி இணையத்தில் பதிவேற்றுவதாக மிரட்டி பணம் பறித்துள்ளான்.

ஒரு கட்டத்தில் பணம் கொடுக்க இயலாது என்று மாணவி மறுத்த நிலையில், அவரது புகைப்படத்தை ஆபாசமாக மாற்றி மாணவிக்கே அனுப்பி மிரட்டியுள்ளான். இதனால் அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக பிளாக்மெயில் புள்ளிங்கோவை தேடிவந்த காவல்துறையினர் அவனையும், அவனுடன் இருந்து அந்த மாணவியை மிரட்டி பணம் பறிக்க தூண்டியதாக அவனது தாய் மங்கையர்கரசியையும் அதிரடியாக கைது செய்தனர்.

அவனிடம் இருந்து மிரட்டலுக்கு பயன்படுத்தப்பட்ட செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் உள்ள வீடியோக்களில் புள்ளிங்கோ பிளாக்மெயிலர் மறைவான இடத்தில் வைத்து ஒரு இளைஞரை கூட்டாளியுடன் சேர்ந்து தாக்கும் காட்சி இருந்தது.

மற்றொரு வீடியோவில் அரைபோதையில் இருக்கும் பிளாக்மெயிலர், ஒரு மாணவனை அறை ஒன்றில் அடைத்து வைத்து, அவனது முகத்தில் சரமாரியாக அடிப்பதோடு அவனை இழுத்துப்போட்டு மிதிக்கும் காட்சிகளும் இடம் பெற்று இருந்தது.

மற்றொரு வீடியோவில் அவன் சில மாணவர்களுடன் சேர்ந்து மாணவிகள் மத்தியில் மற்றோரு மாணவனை அடித்து கத்தியால் வெட்டும் கலவர காட்சிகள் இடம் பெற்று இருந்தன.

இந்த வீடியோக்கள் எப்போது எடுக்கப்பட்டவை இதில் பிளாக்மெயிலரிடம் சிக்கி அடிவாங்கும் நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் செய்யும் கல்லூரி மாணவர்களை பிடித்து அவர்களின் செல்போன்களை பறித்து அதில் இருக்கும் அவனது காதலியின் புகைப்படம் மற்றும் வீடியோவை கொண்டு அந்த பெண்களையும் மிரட்டி பணம் பெற்றதாக கூறப்படுகின்றது.

தறிகெட்டு திரிந்த தனது மகனை கண்டிக்காமல், செல்ல மகன் செய்யும் அத்தனை சேட்டைகளும் தெரிந்தும், கண்டிக்க தவறியதோடு பிளாக்மெயில் செய்து பறித்த பணத்தை ஆசை ஆசையாய் வாங்கி வைத்துக் கொண்டதால், புள்ளிங்கோ மகனுக்கு ஜோடியாக அவனது தாய் மங்கையர்கரசியும் ஜெயிலில் கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments