கேரளாவில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு: வரதட்சணை கொடுமை என பெண்ணின் பெற்றோர் புகார்

0 5067

கேரளாவில் வரதட்சணை கொடுமையை வாட்ஸ் அப் மூலம் உறவினர்களுக்கு தெரிவுப்படுத்திய இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிலமேல் கைதோடு பகுதியை சேர்ந்த விஸ்மயாவுக்கும், சாஸ்தாம் கோட்டையை சேர்ந்த மோட்டார் வாகனப் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கிரணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த சில மாதங்களிலே கிரண் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியுள்ளார், அதனை விஸ்மயா வாட்ஸ் அப் மூலம் உறவினர்களுக்கு தெரிவுப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விஸ்மயா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக அவரது உறவினர்களுக்கு கிரண் குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். விஸ்மயாவின் பெற்றோர் அளித்த புகாரையடுத்து, கிரணை கைது செய்த போலீசார், அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments