உ.பி-யில் மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்ட 17 வயது சிறுமி: பதைபதைக்கும் காட்சிகள்

0 4718

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 17 வயது சிறுமி மாடியிலிருந்து தூக்கி வீசப்படும் பதைபதைக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

மதுரா நகரில் வசித்து வந்த 3 இளைஞர்கள் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை ஓராண்டாகப் பின்தொடர்ந்து வந்து தொந்தரவு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. செவ்வாய் இரவு சிறுமியின் வீட்டிற்குள் புகுந்த அவர்கள் சிறுமியின் தாய், தந்தை மற்றும் அண்ணனை சரமாரியாகத் தாக்கிவிட்டு, சிறுமியை 2வது மாடிக்குத் தூக்கிச் சென்று பால்கனியில் இருந்து சாலையில் வீசினர்.

படுகாயமடைந்த சிறுமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனை அழைத்து சென்றனர். இரண்டாம் தளத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டதால் சிறுமியின் தண்டுவடத்தில் பலத்த காயம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக இருவரை கைது செய்த போலீசார் மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments