மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், கேரளாவில் பரவும் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ்... மத்திய அரசு எச்சரிக்கை

0 3338

மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், கேரளா ஆகிய மாநிலங்களில் உருமாறிய டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் பரவி இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

3 மாநிலங்களில் தலா 2 மாவட்டங்கள் என மொத்தம் 6 மாவட்டங்களில் 40 பேருக்கு இந்த டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.

அதில் கொரோனா பரிசோதனை மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி, தடுப்பூசி போடுவதை துரிதப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments