2025ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனால் கலந்து விற்க இலக்கு

0 1788

2025ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனால் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்துள்ளதால், எண்ணெய் இறக்குமதி குறைந்து பெருமளவில் அந்நியச் செலாவணி மிச்சமாகும் எனக் கூறப்படுகிறது.

எண்ணெய் இறக்குமதியைக் குறைத்துக் கரும்பு விவசாயிகளுக்கு வருமானத்தை அதிகரிப்பதற்காக இப்போது பெட்ரோலில் எட்டரை விழுக்காடு எத்தனால் கலந்து விற்கப்படுகிறது. 2025ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனால் கலந்து விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்டுவதற்காக எத்தனால் தயாரிக்க வழங்கும் கழிவுச் சர்க்கரை, அரிசி, சோளம் ஆகியவற்றின் அளவைப் படிப்படியாக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு 7 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் எண்ணெய் இறக்குமதிக்குச் செலவாகும் நிலையில், பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனால் கலந்து விற்பதால் அந்நியச் செலாவணி பெருமளவில் சேமிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments