இந்தியாவில் இருந்து துபாய் செல்லும் பயணிகள் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்

0 2589

இந்தியாவில் இருந்து துபாய்க்குச் செல்வோர் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என வழிகாட்டலில் குறிப்பிட்டுள்ளது.

எமிரேட்ஸ் நிறுவனம் துபாயில் இருந்து இந்தியாவுக்கு விமானப் போக்குவரத்தை மீண்டும் தொடங்கியுள்ளது. பயணிகள் குடியிருப்பு விசா வைத்திருப்பதுடன் சைனோபார்ம், பைசர், ஸ்புட்னிக், அஸ்ட்ரா செனேக்கா ஆகிய தடுப்பூசிகளில் ஏதாவதொன்றை 2 டோஸ்களும் போட்டிருக்க வேண்டும்.

விமானம் புறப்படுவதற்கு 48 மணி நேரத்துக்கு முன் சோதனை செய்து கொரோனா இல்லை எனச் சான்று பெற்றிருக்க வேண்டும். விமானம் புறப்படுவதற்கு 4 மணி நேரத்துக்கு முன் ஒருமுறையும், துபாயில் தரையிறங்கிய பின் ஒருமுறையும் கொரோனா சோதனை செய்ய வேண்டும். இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் கொரோனா சோதனை முடிவு வரும் வரை தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments