மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி சென்று தடுப்பூசி செலுத்தக்கோரிய வழக்கு... உயர்நீதிமன்றம் அதிருப்தி

0 1929

மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த கோரிய வழக்கில் அரசு தாக்கல் செய்த அறிக்கை தெளிவற்று இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையில், தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அறிக்கையை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், மாற்றுத் திறனாளிகளில் பல வகையினர் இருப்பதாகவும், அவர்களுக்கு எப்படி தடுப்பூசி செலுத்தப்படும் என எந்த தகவலும் இல்லை எனவும் அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments