புதுச்சேரி அமைச்சரவைபட்டியலைத் துணைநிலை ஆளுநர் தமிழிசையிடம் வழங்கினார் முதலமைச்சர் ரங்கசாமி

0 2420

புதுச்சேரி தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் அமைச்சரவையில் இடம்பெறுவோர் பட்டியலைத் துணைநிலை ஆளுநர் தமிழிசையிடம் முதலமைச்சர் ரங்கசாமி வழங்கியுள்ளார்.

இந்தக் கூட்டணி சார்பில் முதலமைச்சராக ரங்கசாமி மே 7ஆம் நாள் பதவியேற்றார். அதன்பின் 50 நாட்களாக அமைச்சர்கள் யாரும் பதவியேற்காத நிலையில் இன்று காலையில் துணைநிலை ஆளுநர் தமிழிசையைச் சந்தித்துப் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி அமைச்சரவையில் இடம்பெறுவோரின் பட்டியலை அவரிடம் வழங்கினார்.

ஜூன் 25 அல்லது 27 ஆம் நாள் அமைச்சர்களின் பதவியேற்பு விழா நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments