2025ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனால் கலந்து விற்க இலக்கு

0 2138
2025ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனால் கலந்து விற்க இலக்கு

2025ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனால் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்துள்ளதால், அதற்கேற்றபடி உணவுக் கொள்கையை அரசு மாற்றியமைத்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து எண்ணெய் இறக்குமதியைக் குறைத்துக் கரும்பு விவசாயிகளுக்கு வருமானத்தை அதிகரிக்கும் நடவடிக்கையாக இப்போது பெட்ரோலில் எட்டரை விழுக்காடு எத்தனால் கலந்து விற்கப்படுகிறது.

2025ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனால் கலந்து விற்க இலக்குக் வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இந்த இலக்கை எட்டுவதற்காக எத்தனால் தயாரிப்பதற்காக வழங்கும் கழிவுச் சர்க்கரை, அரிசி, சோளம் ஆகியவற்றின் அளவைப் படிப்படியாக அதிகரிப்பதற்கான திட்டத்தை மத்திய உணவு அமைச்சகம் தயாரித்துள்ளது.

ஆலைகளுக்கு ஒரு கிலோ 20 ரூபாய் என்கிற விலையில் அரிசி வழங்கினால் ஒரு லிட்டர் எத்தனால் 57 ரூபாய்க்குத் தயாரிக்க முடியும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments