சி.எஸ்.கே ஓனர் சிமெண்ட் பேக்டரியில் பைப்வெடிகுண்டு..!

0 3468
சி.எஸ்.கே ஓனர் சிமெண்ட் பேக்டரியில் பைப்வெடிகுண்டு..!

நெல்லை இந்தியா சிமெண்ட் தொழிற்சாலையில் இருந்து 2 பைப் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. பைப்குண்டுகளை வைத்தது யார் என போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளர் சீனிவாசனுக்கு சொந்தமான, இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தொழிற்சாலை ஒன்று நெல்லை மாவட்டம் தாழையூத்து சங்கர் நகரில் செயல்பட்டு வருகிறது.

இதில் 100க்கும் மேற்பட்ட நிரந்தரத் தொழிலாளர்களும் ஆயிரக்கணக்கான ஒப்பந்த அடிப்படையிலான தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர் .

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் நெல்லை இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் பலரை ஆலய நிர்வாகம் பணி நீக்கம் செய்ததாக கூறப்படுகிறது பலரை குறைந்த நாள் மட்டும் பணிக்கு வருமாறும் ஆலை நிர்வாகத்தினர் கூறியுள்ளனர். 

இந்நிலையில் செவ்வாய்கிழமை மாலை பணிக்கு வந்த யாரோ சில மர்ம நபர்கள் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் வளாகத்தில் உள்ளே குண்டு வெடிப்பை நிகழ்த்தும் நோக்கில் இரண்டு பைப் வெடிகுண்டுகளை வைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதனை கண்ட ஆலை நிர்வாகம் காவல் துறைக்கு அளித்த தகவலின் பேரில், தாளையூத்து காவல் துறையினர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.

குறைந்த அளவு பணிக்கு வரச்சொன்ன தொழிலாளர்களில் யாரோ சிலர், இந்த சம்பவத்தில் ஈடுபட்டது காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதால் அவரை பிடிப்பதற்காக காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். 

ஆலைக்கு பைப் வெடிகுண்டு வைக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் ஆலையில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகளை செயலிழக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டு உள்ளனர் .

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments