இருட்டில் தனியாக வந்த பெண்ணிடம் அத்துமீறிவிட்டு குடிகாரனின் அக்கா நாடகம்..! சிசிடிவி அடித்தது சிக்ஸர்..!

0 6782
இருட்டில் தனியாக வந்த பெண்ணிடம் அத்துமீறிவிட்டு குடிகாரனின் அக்கா நாடகம்..! சிசிடிவி அடித்தது சிக்ஸர்..!

காஞ்சிபுரம் அருகே பணி முடிந்து இரவு நேரத்தில் தனியாக வீடு திரும்பிய பெண்ணை பின் தொடர்ந்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்ட குடிகார இளைஞனை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் கைது செய்து அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்க வைத்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் விஷ்ணு காஞ்சி எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் கடந்த 14ஆம் தேதி இரவு சுமார் 9 மணியளவில் தனது பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவன் இருசக்கர வாகனத்தில் அந்தப்பெண்ணை பின் தொடர்ந்து வந்து அவரை கடந்து சென்று யூடர்ன் அடித்து வந்தான். அவனை கண்டதும் ஒதுங்கி நின்ற அந்தப் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு விட்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச்சென்றான்.

தனக்கு நடந்த சம்பவத்தை வீட்டில் சொல்ல முடியாமல் அந்தப்பெண் புழுங்கித்தவித்த நிலையில் இந்த காட்சி அங்குள்ள சிசிடிவி ஒன்றில் பதிவானதை கண்ட சிலர், தங்கள் பகுதியில் தனியாக செல்லும் பெண்கள் உஷாராக இருக்கும் படியும், இது போன்ற காமுகர்கள் சுற்றுவதாகவும் எச்சரித்து அந்த காட்சியையும் வெளியிட்டிருந்தனர்.

சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலான நிலையில் காவல்துறையினர் அந்த பெண்ணை அழைத்து புகாரை பெற்று சிசிடிவி காட்சியில் பைக்கில் பறந்து சென்ற பக்கிரியை தேடி வந்தனர்.

விசாரணையில் பெண்ணிடம் அத்துமீறியவன் சரத்குமார் என்ற 24 வயது குடிகாரன் என்றும், மூக்கு முட்ட குடித்து விட்டு போதையில் தான் அவ்வாறு நடந்து கொண்டதாக கூறியுள்ளான்.

அவனை சிறப்பாக கவனித்த போலீசார் அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்க வைத்தனர். இருகைகளையும் கூப்பி அக்கா மன்னித்து விடுங்கள் என்றும் போதையில் அப்படி செய்து விட்டதாகவும் அவன் நாடகமாட, அந்தப்பெண்ணோ உன்னை மன்னிக்க முடியாது என்று கூறிச்சென்று விட்டார்...

இதையடுத்து பெண்ணிடம் அத்துமீறியதாக வழக்கு பதிவு செய்து அந்த சரக்கு குமாரை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பினர்.

யாருமில்லை என்று வம்பு செய்த சரக்கு குமாரை போலீசில் சிக்கவைத்து சிசிடிவி சிக்ஸர் அடித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments