2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு செப்டம்பர் முதல் தடுப்பூசி போட வாய்ப்பு

0 4410
செப்டம்பர் மாதம் முதல் 2 வயதுக்கு மேற்பட்டோருக்கு கோவாக்சின் தடுப்பூசிப் போடும் பணிகள் தொடங்கும் என்று எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் மாதம் முதல் 2 வயதுக்கு மேற்பட்டோருக்கு கோவாக்சின் தடுப்பூசிப் போடும் பணிகள் தொடங்கும் என்று எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

மூன்றாவது அலை குறித்த கணிப்புகள் குழந்தைகள் மீதான பாதிப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடும் திட்டத்தை மத்திய அரசு துரிதப்படுத்தி வருகிறது.

கடந்த ஜூன் 7ம் தேதி முதல் 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுவதற்கான பரிசோதனைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்தியாவில் பைசர் தடுப்பூசிக்கு விரைவில் ஒப்புதல் கிடைக்க உள்ள நிலையில் அந்த தடுப்பூசியும் குழந்தைகளுக்கு செலுத்தக்கூடியதாக இருக்கும் என்றும் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments