மீண்டும் பறக்கிறது ஜெட் ஏர்வேஸ்..!

0 5451
முடங்கி உள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை மீண்டும் இயக்கும் திட்டத்திற்கு NCLT எனப்படும் தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயம் அனுமதி வழங்கி உள்ளது.

முடங்கி உள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை மீண்டும் இயக்கும் திட்டத்திற்கு NCLT எனப்படும் தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயம் அனுமதி வழங்கி உள்ளது.

லண்டனில் உள்ள கார்லாக் கேபிடல் (Kalrock Capital) மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தொழிலதிபர் முராரி லால் ஜலான் ஆகியோர் கூட்டாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை இயக்க முன்வந்துள்ளனர்.

இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கிய NCLT, ஜெட் ஏர்வேஸ் விமானங்களுக்கான பயண ஸ்லாட்டுகளை 90 நாட்களுக்குள் ஒதுக்க டிஜிசிஏ-வுக்கு உத்தரவிட்டுள்ளது. கடன் சுமை காரணமாக 2019 ஏப்ரலில் ஜெட் ஏர்வேஸ் முடங்கியது.

அதன் பெரும்பாலான முக்கிய பயணத் தடங்கள் அனைத்தும் இதர விமான நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு விட்டன. எனினும் இந்த ஆண்டு இறுதியில் 20 தடங்களில், 20 சிறிய மற்றும் 5 பெரிய விமானங்களுடன் அதன் சேவை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments