தமிழகத்தில் 10 நாட்களில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும்-மின்சாரத்துறை அமைச்சர் உறுதி

0 2945
தமிழகத்தில் 10 நாட்களில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதியளித்துள்ளார்.

தமிழகத்தில் 10 நாட்களில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதியளித்துள்ளார்.

பேரவையில் மின் கட்டணம் வசூலிப்பதில் குளறுபடிகள் இருப்பதாக அதிமுக உறுப்பினர் கூறிய குற்றச்சாட்டுக்கு பதிலளித்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மின் கட்டணம் வசூலிப்பதற்கு போதிய கால அவகாசம் கொடுக்கப்பட்டது. அதில் எவ்விதமாக குளறுபடியும் இல்லை என்றார்.

தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் மின் தடை ஏற்படுவதாகவும், 10 நாட்களுக்குள் அனைத்தும் சரிசெய்யப்பட்டு தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments