மாஸ்டர் ப்ளான் போட்டு குழந்தை கடத்தல்.. ஸ்கெட்ச் போட்டு குழந்தையை மீட்டு கடத்தியவர்களை குடும்பத்தோடு தூக்கிய போலீசார்..!

0 3991

ருமபுரி அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டிலிருந்து கடத்தப்பட்ட ஆண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. குழந்தை பாக்கியத்திற்கு காத்திருந்து கருச்சிதைவு அடைந்த பெண் ஒருவர் குழந்தையை கடத்திச் சென்றது தெரியவந்த நிலையில், அவர் தனது கணவருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த நாச்சனூரைச் சேர்ந்த மாலினி என்ற பெண் கடந்த 18ஆம் தேதி பிரசவத்துக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, 19ஆம் தேதி அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. 20ஆம் தேதி காலை மாலினி குளியலறை சென்றிருந்த நேரம் அருகில் உறவினர்களும் இல்லாத சூழலில் குழந்தையை மர்ம நபர் கடத்திச் சென்றுள்ளார். உடனடியாக மருத்துவமனை காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் குழந்தையைக் கடத்தியது ஒரு பெண் என்பது தெரியவந்தது.

தொடர்ந்து தருமபுரி நகர் காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, மாவட்ட எஸ்.பி. கலைச்செல்வன் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தீவிர விசாரணையில் மாலினி அனுமதிக்கப்பட்டிருந்த அதே வார்டில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டு, கருச்சிதைவு அடைந்த தஞ்சியா என்ற பெண் குழந்தையை கடத்தியது தெரியவந்தது.

தஞ்சியாவிடமிருந்து குழந்தையை மீட்டு மாலினியிடம் ஒப்படைத்த போலீசார், அவரையும் குழந்தை கடத்தலுக்கு உடந்தையாக இருந்த தஞ்சியாவின் கணவர் ஜான்பாஷா, தஞ்சியாவின் தாய், பாட்டி என 4 பேரையும் கைது செய்தனர். துரிதமாக செயல்பட்டு குழந்தையை மீட்டுக்கொடுத்த போலீசாருக்கு அருள்மணி - மாலினி தம்பதியினர் கண்ணீருடன் நன்றி கூறினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments