கோவேக்சின் கொரோனாவில் இருந்து 77.8 சதவிகித பாதுகாப்பை அளிக்கும்-3 ஆம் கட்ட சோதனை முடிவில் தகவல்

0 3652
கோவேக்சின் தடுப்பூசி கொரோனாவில் இருந்து 77.8 சதவிகித பாதுகாப்பை அளிக்கும் என அதன் 3 ஆம் கட்ட சோதனை முடிவுகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கோவேக்சின் தடுப்பூசி கொரோனாவில் இருந்து 77.8 சதவிகித பாதுகாப்பை அளிக்கும் என அதன் 3 ஆம் கட்ட சோதனை முடிவுகளில் இருந்து தெரியவந்துள்ளது.

25 ஆயிரத்து 800 பேரிடம் நடத்தப்பட்ட மூன்றாம் கட்ட சோதனை முடிவுகள் தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரின் தடுப்பூசி நிபுணர் குழுவால் பரிசீலிக்கப்பட்டு, ஒப்புதல் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கடந்த மார்ச்சில் கோவேக்சின் 3 ஆம் கட்ட சோதனையின் முதலாவது இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபோது, தொற்று ஏற்படாதவர்களுக்கு, 2 ஆவது டோஸ்  போடப்பட்டபிறகு அது 81 சதவிகித பாதுகாப்பை அளிக்கும் என தெரிவிக்கப்பட்டது.

இப்போது 3 ஆம் கட்ட சோதனை முடிவுகளுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளதால்,  3 ஆம் அலை வருவதற்கு முன் தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்த அது உதவிகரமாக இருக்கும் என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments