குடிபோதையில் ஆட்டோ ஓட்டுநர் மீது தாக்குதல் - 2 போலீசார் சஸ்பென்ட்

0 2367
சென்னை தேனாம்பேட்டையில், குடிபோதையில் ஆட்டோ ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்திய 2 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை தேனாம்பேட்டையில், குடிபோதையில் ஆட்டோ ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்திய 2 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தேனாம்பேட்டை காவலர் குடியிருப்பில் வசித்து வரும், சட்டம்-ஒழுங்கு பிரிவு காவலர்களான மணிகண்டன் , ஞானசேகரன் இருவரும் விருந்து ஒன்றுக்கு சென்று மது அருந்திவிட்டு, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளனர்.

அங்கு சாலையோரம் அமர்ந்து தாயக்கட்டை விளையாடிவர்களை கலைந்து செல்லுமாறு கூறியபோது, குடிபோதையில் பைக் ஓட்டி வந்துவிட்டு, தங்களை விரட்டுவதா என சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதில், ஆட்டோ ஓட்டுனர் குணநேசன் என்பவரை காவலர்கள் இருவரும் சரமாரி தாக்கியதில் அவர் படுகாயமடைந்துள்ளார்.

இது குறித்த புகாரின்பேரில் விசாரணை நடத்திய உயரதிகாரிகள் காவலர்கள் இருவரையும் சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments