”விஜய் அண்ணா வெளியே வாங்கனா”-பிறந்தநாள் வாழ்த்துக் கூற, நடிகர் விஜய் வீட்டிற்கு முன் குவிந்த ரசிகர்கள்

0 8526
நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூற, சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டிற்கு வந்த ரசிகர்கள், அவ்வழியே வரும் சொகுசு கார்களை மறித்து, விஜய் இருக்கிறாரா என ஏக்கத்துடன் பார்த்து வருகின்றனர்.

நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூற, சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டிற்கு வந்த ரசிகர்கள், அவ்வழியே வரும் சொகுசு கார்களை மறித்து, விஜய் இருக்கிறாரா என ஏக்கத்துடன் பார்த்து வருகின்றனர்.

நடிகர் விஜயின் 47வது பிறந்தநாளை, அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சென்னை நீலாங்கரையில் அமைந்துள்ள விஜய் வீட்டுக்கு வந்த ரசிகர்கள் சிலர், விஜய் அண்ணா..வெளியில் வாருங்கள் என கோஷம் எழுப்பினர்.

பெண் ரசிகர்கள் சிலர் பரிசுப் பொருட்களுடன் விஜய் வீட்டின் முன்பு காத்திருந்தனர். மேலும் சிலர் சாலையில் வரும், குடியிருப்புவாசிகளின் சொகுசு கார்களை மறித்து காருக்குள் விஜய் இருக்கிறாரா என்றும் ஆர்வமிகுதியால் பார்த்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments